திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்க நகை கொள்ளை

 



தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 23-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தி.மு.க சார்பில் கடற்கரை ராஜ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தி.மு.க வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

தி.மு.க வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில், ஆள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி 122 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சத்திரப்பட்டியில் கடற்கரைராஜை ஆதரித்து நேற்று (ஏப்.13) சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் பரப்புரை செய்தார். பரப்புரையில் பங்கேற்பதற்காக கடற்கரை ராஜ் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த சிலர் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக சாத்தூர் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments