பெரியகுளத்தின் வளர்ச்சிக்கு 5 முக்கிய வாக்குறுதிகள்..... விசிக வேட்பாளர் சக்திவேல் அதிரடி அறிவிப்பு.....


தேனி மாவட்டம்,  பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சக்திவேல்,  தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தொகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தனது தேர்தல் வாக்குறுதிகளை விரிவாக எடுத்துரைத்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு 1. மாம்பழக் கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலை:

பெரியகுளம் பகுதியின் பிரதான தொழிலான விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிநவீன மாங்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு முறையான விலை கிடைப்பதோடு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும்.2. அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல்:

பெரியகுளம் அரசு மருத்துவமனை போதிய வசதிகளின்றி இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மருத்துவமனையை விரிவுபடுத்தி, கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.3. போக்குவரத்து வசதிகள் மேம்பாடு:

பெரியகுளத்திலிருந்து கானா விலக்கிற்குச் பொதுமக்கள் எளிதில் சென்று வர, நேரடி அரசுப் பேருந்து வசதிகள் புதிதாக ஏற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் கல்வி மற்றும் வேலைக்காகச் செல்வோர் பெரும் பயனடைவர்.4. விவசாயிகளுக்கான பாதுகாப்பான நெல் கொள்முதல் நிலையம்:

சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனையாதவாறு நிரந்தர மேற்கூரையுடன் கூடிய நெல் கொள்முதல் நிலையக் கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.5. சோத்துப்பாறை அணை சீரமைப்பு மற்றும் சுற்றுலா மேம்பாடு:

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க சோத்துப்பாறை அணை முறையாகத் தூர்வாரப்பட்டு, சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும், சோத்துப்பாறை அணைப் பகுதியை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றி, அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

"பெரியகுளம் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நன்கு அறிந்துள்ளேன். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். தொகுதியை ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதே எனது இலக்கு" என வேட்பாளர் சக்திவேல் ஆவேசமாகத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments