வாக்காளர்களுக்கு ரூ.8000 போலி கூப்பன் வழங்கும் திமுகவுக்கு போட்டியாக ரூ.10000 போலி செக் வழங்கிய அதிமுக......

 


கவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.10,000க்கான டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினர் திமுகவினரிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.ஆர்.ஜி. அருண்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை கே.பி. சூரியபிரகாஷ் போட்டியிடுகிறார்.தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சிங்காநல்லூர், துடியலூர் பகுதிகளில் அதிமுகவினர் டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000, ரூ.2000 செக் மாதிரிகளை வாக்காளர்களுக்கு அதிமுகவினர் விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து டோக்கன் விநியோகித்த நபர்களை சுற்றி வளைத்த திமுகவினர் அவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Post a Comment

0 Comments