நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை . தாக்கல் செய்தார்.
நாகை செய்தியாளர் கலைச்செல்வம்


0 Comments