தேனி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா



தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் பாண்டியன் பணி நிறைவு பெற்றுள்ளார். இந்நிலையில், அரசு மாதிரி பள்ளி வளாகத்தில், பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பாண்டியன் ஆற்றிய பங்கு குறித்து ஆசிரிய பெருமக்கள் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டியனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து பாராட்டு கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில், பள்ளி ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments