எனது வெற்றி உறுதி செய்யப் பெற்ற வெற்றி..... திருப்பத்தூரில் வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் தனது வேட்பு மனுவினை திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சிவபாலனிடம் தனது ஆதரவாலுடன் வந்து தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,

திருப்பத்தூர் தொகுதியில், கடந்த நான்கு முறை  போட்டியிட்டு தொடர் வெற்றியை பெற்றது போல இந்த முறையும் திருப்பத்தூர் மக்களின் நல் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 

முதல்வர் செயல்படுத்திய திட்டத்தால் ஒவ்வொரு இல்லங்களிலும், ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், அவர் மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த தலைவராக திகழ்கிறார். அத்தகைய முதல்வர் மற்றும் வலுவான கூட்டணி கட்சி ஆதரவுடன் போட்டியிடுகின்ற எனக்கு மக்கள் ஆதரவு தர தயாராக உள்ளனர். எனவே எனது வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி என்றார். தொடர்ந்து,

பல ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகள் பெற்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் முடிவுகள் வரும் வரை வேட்பாளர்களுக்கு பதட்டமான நிலை தான் இருக்கும் என்றவர், எந்த கட்சி, எந்த கூட்டணியின் வாக்குகளை பிரிக்கின்றார்கள் என்பது தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். பல்லுக்கு ஏதோ மசிவதைப் போல தவெக வினர் திமுகவினரை விமர்சிக்கின்றனர். அவரது ஜனநாயகன் திரைப்படம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்சார் போர்டிடம் உள்ளது.  இரண்டரை மாதமாக வெளிவராத படத்தைக் குறித்து பாஜகவிடம் கோரிக்கை கூட விஜய் வைப்பது கிடையாது என்று விமர்சித்தவர், கரூர் சம்பவத்தில் விஜயின் வினோதமான நடவடிக்கைகளை தமிழக மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள், இந்த தேர்தலில் விஜய்க்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments