திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த என் 49 பரணம்பேடு கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்க கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தினர்.பின்னர் சுவாமிக்கு பால், தயிர், இளநீர் கொண்டு சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சாமியை அலங்காரம் செய்து தீபாரதனை காட்டப்பட்ட நிலையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.மாலை 6 மணிக்கு ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.பின்னர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனை ஊர் பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



0 Comments