தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (01.05.2026) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூ மத்யூ சார் ஆட்சியர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, இவ்வாண்டு 01.05.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி, திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், துணை இயக்குநர்கள் விவேக் பரஸ்நாத் யாதவ், (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்), ஆர்.லட்சுமி, (பொ) (பெரியார் புலிகள் காப்பகம்), மாவட்ட வன அலுவலர் கிரண், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் மரு.கலைச்செல்வி, துணை இயக்குநர் மரு.வரதராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட இரு மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

0 Comments