சென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடியது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அஸ்வின் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.சென்னை அணி நேற்று ஐதராபாத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராஅபாத் ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் சாம்சன் ரன்களில் ஆடமிழந்தார். அப்போது பேட்டிங் வந்த மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியநிலையில், திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஓட முடியாமல் தவித்த மாத்ரே அடுத்த ஒரு சில பந்துகளிலேயே அவுட்டானார்.இந்நிலையில், ஆயுஷ் மாத்ரேவின் காயம் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அஸ்வின் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன் தான் வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் கடந்த போட்டிகளில் பீல்டிங் செய்யவே இல்லை. வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால் அதை தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்யவேண்டும். அதுதான் இஞ்சூரி மேனேஜ்மெண்ட்டின் வேலை.
களத்தில் அவர் நொண்டியபடி இருக்கிறார். உங்களுடைய பிசியோதெரபிஸ்டுகள் வந்து பரிசோதித்திருக்கிறார்கள். அதற்குபிறகும் அவரை விளையாட வைத்து, ரன் ஓடவைக்கிறீர்கள். இது பெரிய காயமாக மாறினால், அவராலும் அடுத்த 6 வாரங்களுக்கு விளையாட முடியாது. எப்படி வீரர்களை இவ்வளவு அலட்சியமாகக் கையாள முடிகிறது,” என அஸ்வின் எச்சரித்தார்.

0 Comments