போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்



தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வின் போது தேனி எம்.பி .தங்கத்தமிழ்ச்செல்வன்,   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெருமாள் மற்றும் திமுக கூட்டணி நிர்வாகிிகள் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து தொகுதி வளர்ச்சிக்கான தேர்தல் பணிகளை ஓ. பன்னீர்செல்வம்  முன்னெடுத்து வருகிறார்.

Post a Comment

0 Comments