அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து உற்சாகத்தில் ஆடி,பாடி மகிழ்ந்தனர்

  


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்  கடந்த 32 ஆண்டு காலத்திற்கு முன்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திக்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முன்னாள் மாணவர்கள் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளில்  தனியார் மற்றும் அரசு பணிகளில் வேலை பணியாற்றி குடும்பத்தினருடன் வசித்து  வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 32 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அனைவரும் சந்திப்பதற்கு முடிவு செய்து,அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் பிரத்தியேக வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அந்த குழுவில் அனைவரையும் ஒருங்கிணைத்து, தாம் கல்வி பயின்ற பள்ளியில் மீண்டும் அனைவரும் சந்திப்போம் என்று, அன்பின் சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் ஆர்வமுடன் பங்கேற்றனர்.பழைய தனது நண்பர்களை கண்டதும் உற்சாக மிகுதியால் ஆட்டம் பாட்டத்துடன் ஒயிலாட்டம் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். தாங்கள் படித்த காலத்தில் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பேசி நினைவு கூர்ந்தனர்.

மேலும் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை அழைத்து வந்து  கௌரவப்படுத்தி அவர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகளை பரிமாறினர்.மேலும், தாங்களும் குடுபத்தினருடன் உணவுகள் பரிமாறி, உண்டு மகிழ்ந்தனர். பின்னர் மாலை விளையாட்டு போட்டிகள் வைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

Post a Comment

0 Comments