தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்..... பசும்பொன்னில் மூர்த்திதேவர் பேட்டி

 


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்  உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.எம். மூர்த்திதேவர் தரிசனம் செய்தார்.அகில இந்திய பசும்பொன்  முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஏ.எம் மூர்த்தி தேவர்  பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் பொழுது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டதால் மார்ச் மாதம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக கட்சியின் தலைவர்கள் தூண்டுதல் காரணமாக  என்னை அமலக்காக துறையினர்  கைது செய்தனர். 



தற்போது என்மீது குற்றவழக்கு நிருப்பிக்க முடியாத காரணத்தினால் ஜாமீன் வந்துள்ளேன் என்றார்,  ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு அன்னதானம், மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேவர் வழியில் எனது தாத்தா சேதுராம்பாண்டியன் காலம் முதல்  செய்து வருகிறேன் என கூறினார், சட்டமன்ற தேர்தலில்  தமிழக முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அதுபோல 2026  சட்டமன்றத்தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தின் சார்பாக தென் மாவட்டங்களில் முதுகுளத்தூர், திருவாடானை, சாத்தூர் மற்றும் பிற தொகுதியில் போட்டியிட்ட தேவர் சமுதாய தலைவர்கள்  தோல்வியுற்றது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது வடமாவட்டத்தில் சாதி கட்சியாக இருக்கும்  பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற சாதி கட்சிகள் வெற்றி பெற்றனர்

அதனை போல வருங்காலத்தில் தென் மாவட்டங்களில் தேவர் சமுதாய தலைவர்கள் வெற்றி பெற மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அகில இந்திய பசும்பொன்  முன்னேற்ற கழகம்  முக்குலத்தோர்  சமூக மக்களின் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் கூறினார்  நிகழ்வில்  பொதுச் செயலாளர்  இராமசுப்பு,மாநில தொழிற்சங்க செயலாளர் முத்துக்குமார், நெல்லை மாவட்ட செயலாளர் கதிர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலு மற்றும் முருகன் அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் சந்துரு மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments