கும்மிடிப்பூண்டி: அறியதுறை கிராமத்தில் மரகதவல்லி வரமூர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம்



கும்மிடிப்பூண்டி தொகுதி கீழ்முதலம்பேடு ஊராட்சி அரிய துறை கிராமத்தில். அருள்மிகு மரகதவல்லி வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே ஜி நமச்சிவாயம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்  அபிராமன்  உள்ளிட்ட பலர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கீழ்முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட அரியதுறை கிராமத்தில் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது இக் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 19ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. இதனைடுத்து நேற்று 27ஆம் தேதி காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள்ளாக கோவில் தேரோட்டு விழா நடைபெற்றது இதனையடுத்து தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கீழ்முதலம்பேடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பக்தர்கள் உதவியுடன் தேரோட்டம் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை சேர்ந்த பெரியபாளையம் துணை ஆணையர் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர்கள் முத்துக்குமார், முத்தமிழ்செல்வன், சங்கரன், சுப்பிரமணி, மற்றும் அறநிலைய்துறை ஆய்வாளர்கள் சட்டநாதன், முருகன், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இத்தேரோட்ட விழாவிற்கு கும்மிடிப்பூண்டியில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தேரோட்டத்தை கீழ்முதலம்பேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமசிவாயம், அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கவரப்பேட்டை அபிராமன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

Post a Comment

0 Comments