திருப்பத்தூரில் நடைபெற்ற சதய விழாவில் கனிமவள அமைச்சர் பங்கேற்பு


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 வது சதய விழாவானது தமிழர் தேசம் கட்சி வீர முத்தரையர் முன்னேற்றம் சங்கம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆத்திகாடு மாரிமுத்து,  ஒன்றிய செயலாளர் சுகுமாரன், நகரச் செயலாளர் மருதுபாண்டி மற்றும் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சரும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.கே.பிரபு மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி ஆகியோர் பங்கேற்று வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்கள் தூக்கிலடப்பட்ட நினைவுத்தூணில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் மகேஷ், இளைஞர் அணி துணை செயலாளர் ரஞ்சித், மாவட்ட இணை செயலாளர் அஜித், மாவட்ட இளைஞரணி ரமேஷ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் சமுதாய தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Post a Comment

0 Comments