தேனி மாவட்டம், சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள டாக்டர் அவென்யூ பகுதியிலுள்ள மருதம் பூங்காவில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சேர்மன் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் தலைமை தாங்க, துணை தலைவர் வி.மகாராஜன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுருளிவேல்,பொருளாளர் முகமது ஷேக் இப்ராஹிம் , நிர்வாக குழு உறுப்பினர்கள் சிதம்பரநாதன், முகமது பாட்சா, ஜெகநாதன் உறுப்பினர்கள் சுந்தர், சுருளிப்பட்டி அன்புராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் சாமி, ஹரி ஆசிரியர், சதீஸ், மகாராஜன், பாலமுருகன், கனகராஜன், செல்வம் , கவிஞர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வில் மருதம் பூங்கா சீரமைக்கப்பட்டு 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

0 Comments