நீ நல்லா சாப்பிட்டிருக்க..... கிளாம்பாக்கத்தில் பயணியிடம் ஆவேசமான அமைச்சர்.... கண்டித்த அதிமுக

 


சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் (Kilambakkam) நேற்று பயணிகளுக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்தில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பயணிகளிடம் நடந்து கொண்ட செயலுக்கு அண்ணா திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் சோசியல் மீடியா பக்கத்தில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு.



ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்து துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப் படுத்தி பேசுகிறார்.

இல்ல புரியல…. “நீ நல்லா சாப்பிட்டிருக்க” ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது?

GOAT படத்துல நீங்க போட்ட Traffic Police கேரக்டர் மாதிரியே பேசிட்டு இருக்கிங்க... இது ஒன்னும் சினிமா இல்ல! மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள் என கண்டனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments