ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கோனேரியேத்தல் கிராமத்தில் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து புனித குடங்களில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டு. புனித குடங்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்த சிவாச்சாரியார்கள் கோவில் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.


0 Comments