விளாத்திக்குளம் மாணவி வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்..... பாரத முன்னேற்றக் கழகம் வரவேற்பு......



பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் வசிக்கும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்த   +2 வகுப்பு மாணவியை. தர்ம முனீஸ்வரன் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்றான்.இவன் ஏற்கனவே 70 - வது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று ஆயுள் தண்டனை பெற்ற கைதியாவான்.

ஜாமீனில் வெளியே வந்த இந்த குற்றவாளிதான் மாணவியையும் கொன்றவன் நம் உறவுகளும் பொதுமக்களும்  தொடர்ந்து 19 நாட்கள் தமிழகம் முழுவதும் போராடியதின் விளைவாக இந்த குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

இன்றைய தினம் இந்த குற்றவாளி  தர்ம முனீஸ்வரனுக்குதூத்தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்டியுள்ளது.மகிழ்சியாக உள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் இனி குழந்தை முதல் பாட்டி வரை பாலியல் கொடுமை செய்து கொல்ல துடிக்கும்-,நினைக்கும்  கயவர்ளுக்கு மரண அடி தீர்ப்பாக அமைந்துள்ளது.

இந்த வரலாற்று மிக்க  தீர்ப்பு விரைந்து கிடைக்க முழு வீச்சில் செயல்பட்ட ,நீதித்துறை-காவல்துறையின் அனைத்து அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள்,வருவாய் துறையினர் மாணவியின் கொலையை தமது குழந்தையின் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் போராடிய ஆயர்குல உறவுகள்,பொதுமக்கள்,ஊடகங்கள்,பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்.இவ்வாறு பாரதராஜா யாதவ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments