திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டணமல்லி ஊராட்சி லட்சுமிபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு ஆலய விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
பின்னர் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆலய விமானம், ராஜகோபுரம், மூலவர், உற்சவர், பரிவார தெய்வங்கள், என புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


0 Comments