ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் வராலாற்று சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது.
இக்கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும்.இக்கோவில் திருவிழா கடந்த மே 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து ஒவ்வோர் நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு சினேகவல்லி அம்மன் சமேத அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்தடைந்தனர்.இரண்டு தேர்களில் பெரிய தேரில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடனும், சின்ன தேரில் சினேகவல்லி அம்மன் வீற்றிருந்தனர்.இரண்டு தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக பகதர்கள் வடம் பிடித்து இழுத்து திருவாடானை நான்கு தெருக்கள் வழியாக வந்து இரண்டு தேர்களில் வீதி உலா வந்தனர்.
இந்த தேரோட்டத்தில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் சங்கொலியை எழுப்பினர் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.இரண்டு தேர்களும் நிலைக்கு வந்த பிறகு சுவாமிகள் தேரில் இருந்து இறக்கி தேர்வந்த தடம் பார்க்கும் நிகழ்வை தொடர்ந்து சுவாமி கோவிலுக்கு வந்தடைந்தார்.நாளை தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறும்.


0 Comments