நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ள சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே 12ஆம் தேதி கொடியேற்றுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.தருமபுர ஆதீனத்தின் அருளாசியுடன் நடைபெற்று வரும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.பக்தர்கள் பக்தி உற்சாகத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேரோட்டத்தின் போதே பக்தர்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.சிலம்பாட்டம், சிவவாத்தியங்கள் முழங்க பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கான உபய ஏற்பாடுகளை நாட்டிருப்பு குத்தகை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த தேரோட்டம், பக்தர்களின் ஆன்மிக உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்தது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்






0 Comments