ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வைகாசி மாத பொங்கல் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. மேலும், வரும் வியாழக்கிழமை இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்த இரு முக்கிய பண்டிகைகளையும் முன்னிட்டு, கமுதி வாராந்திர ஆட்டுசந்தையில் இன்று ஆடுகள் விற்பனை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்துக் களைகட்டியுள்ளது.
அதிகாலை 6 மணி முதலே சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், உள்ளூர் பொதுமக்களும் தங்களுக்குத் தேவையான ஆடுகளைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். பண்டிகைக் காலம் என்பதால் ஆடுகளின் விலை வழக்கத்தை விடசற்றுஅதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும், தேவைக் கருதி பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்தும் ஆடுகளை உற்சாாகத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் சந்தை வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது.


0 Comments