தமிழக வெற்றிக் கழகம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரவி கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் டாக்டர் எம் எஸ் ரவி வெற்றி பெற்றதை அடுத்து தொகுதி மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தனியார் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து  தேசிய கீதம் மற்றும் தமிழக வெற்றி கழகம் கொடி பாடல் பாடப்பட்டது பின்னர் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.



பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் சட்டமன்ற வேட்பாளர் ரவி பெருவாரியான   வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்வதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என தெரியவில்லை தொகுதியில் நிறைய குறைபாடுகள் உள்ளன.



இதை அனைத்து எண் சவாலாக எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கு என்றும் மக்கள் பணியில் ஈடுபடுவேன் என தெரிவித்தார் இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் மற்றும் சலீம் தீன் ஸ்ரீதர் மூர்த்தி ரவி சிந்து சாரங்கி சின்ன மாங்கோடு ஜி சிவலிங்கம். நகரம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள்  மகளிர் நிர்வாகிகள்.கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் அறுசுவையான உணவு பிரியாணி வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments