திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.இதையடுத்து யாக குண்டத்தில் பூர்ணாஹதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கோபுர கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை ஊற்றி பட்டாச்சார்யார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷமிட்டு அம்மனை வணங்கினர். இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வீரலட்சுமி அம்மனை தரிசித்து சென்றனர்.




0 Comments