கமுதி - வெள்ளையாபுரத்தில் முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது



ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - வெள்ளையாபுரத்தில் தமிழக முதல்வர் விஜய் 53 -வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தவெக சார்பில் 1000 பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.

தவெக மாவட்ட செயலாளர் மதன் இந்த அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்டச் செயலாளர் மதனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.வெடி வெடித்து மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது பின்னர் 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் 1000 பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தவெக நகர துணை செயலாளர் காளித்துரை செய்திருந்தார். மேலும் தவெக நிர்வாகிகள் வாஞ்சிநாதன்,அய்யனார், சுரேஷ்குமார், வேல்முருகன், பூவரசன், ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதே போல காளியம்மன் கோயில் பகுதி தவெக நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் அன்னதானத்தை மாவட்ட செயலாளர் மதன் துவக்கிவைத்தார் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments