ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அதிமுகவில் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளராக இருந்த செல்வமேரி அக்கட்சியில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்கள் 2000 க்கும் மேற்பட்ட பெண்களுடன் லட்சிய ஜனநாயக கட்சியில், கட்சியின் பொது செயலாளர் நெல்லை ஜீவா முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டார். கமுதிதனியார் திருமண மண்டபத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது .
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் செல்வமேரி வரவேற்று பேசினார். மேலும் நெல்லை ஜீவா கூறும் போது, தமிழகத்தில் மார்ட்டின் குடும்பத்தினர் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து உள்ளதாகவும், சிங்கப்பூரில் வஞ்சிக்கப்பட்ட மார்ட்டின் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துக்குள் வந்து விடக்கூடாது எல்லாக் கட்சிகளும் அச்சத்தில் சூழ்ச்சி செய்து வருகிறது.
என்றும், ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி வரியை செலுத்தக்கூடிய எங்கள் தலைவர் மார்ட்டின் எனவும் கூறினார். மேலும் நீங்கள் அனைவரும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக ஆக வேண்டும் என்ற நோக்கில் வரும் உள்ளாட்சி தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று கூறினார்.



0 Comments