காரைக்குடி, விசாலையன்கோட்டையில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 6-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 15 நிமிடங்களில் 6,600 மரக்கன்றுகள் நட்டு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி தலைவர் முனைவர் சேது குமணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகாராஜா ஸ்ரீ யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
CISF படை மற்றும் 10-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாதனையை உறுதிப்படுத்தி, உலக சாதனைச் சான்றிதழ் மற்றும் “மாஸ்டர் மைண்ட் விருது” வழங்கினர்.
விருதுகள்: டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது செல்வி செ. அழகுமீனா, செல்வி ரா. சுபாஷினி ஆகியோருக்கும், திரு சேது பாஸ்கரன் சிறப்பு விருது செல்வி எஸ்.ஜரின் ஜஸ்டினாவிற்கும் வழங்கப்பட்டது. மேலும் எம்.எஸ். சுவாமிநாதன், அமர்த்யா சென் உள்ளிட்டோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன.

0 Comments