மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருவாடானை தாலுகாக்குழு சார்பில் ஸ்டேட் பேங்க் அருகில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து! – பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பைக் கைவிடு! – தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
வேலைத்திட்ட திருத்தத்தைக் கைவிடு! – நூறு நாள் வேலைத்திட்டத்தில் கொண்டு வரப்படும் மக்கள் விரோதத் திருத்தங்களைக் கைவிட வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ(எம்) தாலுகாக்குழு செயலாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு செயலாளர் குருவேல் கண்டன உரையாற்றி, கோரிக்கைகளின் அவசியத்தை விளக்கிப் பேசினார். மேலும் மாவட்டக்குழு செயலாளர் சந்தானம் முன்னிலை வகித்தார்.
தாலுகா குழு உறுப்பினர்களான:சேதுராமு, அருள் சாமி, பால்ராஜ் N. மணிகண்டன், போஸ், காளிமுத்து செந்தில் குமார், ராமு, சுசிலா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


0 Comments