பொன்னேரி: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாலூர் துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய தவெக நிர்வாகிகள்



தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் ஆலோசனையின் பேரில் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் நாலூர் பகுதியில் பொறுப்பாளர்கள் கோபிநாத் ,சுதேஷ், ராஜீவ்காந்தி, தமிழரசன், டி.மோகன், சின்னமணி, சதீஷ், இ.மோகன், ராம்கி,உள்ளிட்டவர்களின் ஏற்பாட்டில் விழா நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் டில்லிபாபு, ஒன்றிய இணைச் செயலாளர் பிரபா, பொருளாளர் ராகவா, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments