பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம்..... பெண் உதவியாளர் கைது

 


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் தற்போது உதவியாளராக பணிபுரிந்து வரும் . மகாலட்சுமி என்பவர், கடந்த 19.06.2026 அன்று சார்பதிவாளர் (பொறுப்பு) ஆக இருந்தபோது பதிவு செய்த விடுதலைப் பத்திரங்களை விடுவிப்பதற்காக முதலில் ரூ.30,000/- லஞ்சம் கேட்டு, பின்னர் ரூ.27,000/- ஆக குறைத்துக் கேட்டதாக புகார் பெறப்பட்டது.இதன்பேரில், இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  22.06.2026 அன்று மாலை 6.35 மணியளவில் பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட அலுவலர்  மகாலட்சுமியின் உத்தரவின்பேரில், லஞ்சப் பணம் ரூ.27,000/- ஐ அருகிலுள்ள தனியார் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சிக்கந்தர் என்பவர் பெற்றுக் கொண்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அவரிடமிருந்து பணம் முழுவதும் கைப்பற்றப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட அலுவலர் மகாலட்சுமி கைது செய்யப்பட்டு, தொடர் விசாரணை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments