சாட்டியக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு.... சிபிஐஎம் சார்பில் சாலை மறியல் போராட்டம்

 


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் போக்க துரித நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்து ஊராட்சிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சாட்டியக்குடி கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கீழ்வேளுர் தெற்கு ஒன்றியம் சார்பில் சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் ஆர். முத்தையன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 



போராட்டத்தில் அணக்குடி, வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர், ஆதமங்கலம், ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் குடிநீர் வாரிய அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு சுபாஷ் சந்திரபோஸ் மாவட்ட குழு உறுப்பினர் எம். என். அம்பிகாபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தச் சாலை மறியலின் போது கீழ்வேளூர் கச்சனம் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



 நாகை மாவட்ட செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments