உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தசூழலில் நேற்று மாலை பாஜக கொடி கட்டாத காரில் சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.டெல்லியில் இன்று (ஜூன் 2) பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை 5 பக்க கடிதத்தை கொடுத்துள்ளார். அதில் தமிழக அரசியல் நிலவரம், பாஜகவின் தோல்வி, அதற்கான காரணம் ஆகியவற்றை குறிப்பிட்டு, தான் பாஜகவில் இருந்து விலக விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் தற்போது பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்தார். அப்போது பாரதியார் புத்தகத்தை பரிசளித்த அண்ணாமலை, அவரிடமும் பாஜகவில் இருந்து விலகுவது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

0 Comments