காரைக்குடியில் சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம் திறப்பு விழா கோலாகலம்



காரைக்குடியில் எஸ்.எம். டிரேடர்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. வி.பி.எல். என்க்ளேவ், ஹோட்டல் ஜெய்னிகா எதிரில் அமைந்துள்ள புதிய ஷோரூமை தமிழக கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தரமான மின்னணு சாதனங்கள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் இந்த புதிய ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொழில் வளர்ச்சியும், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்க இத்தகைய புதிய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.எம். டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் சி.பி. மகேந்திரன், தொழிலதிபர்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய ஷோரூம் திறப்பை வரவேற்றனர்.

புதிய சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூமில் செல்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன மின்னணு சாதனங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றதுடன், வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments