பொன்னேரி அடுத்த உப்பளம் கிராம மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது..... ஏராளமான பக்தர் கலந்துகண்டு சாமி தரிசனம் செய்தனர்.....


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூடுவாஞ்சேரி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட உப்பளம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சக்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தற்போது சிதலமடைந்து சிலைகள் மட்டுமே இருந்த நிலையில் உப்பளம் கிராம பொதுமக்கள், பக்தர்கள் நிதி, உதவியுடன் பல லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட கோவிலில் சிலை வைத்து கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை சுமார் 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



இக் கும்பாபிஷேக விழாவில் டி.எம்.ஆர்.டி.ஏ. திருவள்ளூர் மாவட்ட செல்போன் சங்க செயலாளர் ஜெ. ராமு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா ரஜினி, தவெக மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரசன்,  மீஞ்சூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளான சேகர், பூசாமி, வினோத், பில்லா, இளங்கோ, அசோக், தயாளன், விஜய் குருவி அகரம். மெய்யழகன், மற்றும் தவெகவை சேர்ந்த ஒன்றிய  நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து சுவாமி கலசங்கள் வழங்கப்பட்டன பொன்னேரி முருகன் ஹோட்டல் நிறுவனர்.சிவகுமார் ஏற்பாட்டில் பிரசாதம் வழங்கினார்கள்.பின்னர் இரவு சுவாமி திருவிதி உலா நடைபெற்றது.




Post a Comment

0 Comments