தேனி: முதலக்கம்பட்டி ஊராட்சியில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம்..... ஊராட்சி செயலருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு.....



தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சி பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ் தீவிர முயற்சியின் காரணமாக, முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக டேங்கர்லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் இன்றி தவித்து வந்த பொதுமக்கள், டேங்கர் லாரி மூலம் குடிநீர் கிடைப்பதற்கு உறுதுணையாக பணிபுரிந்த முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ் அவர்களுக்கு ஊராட்சி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments