சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜயின் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆணைக்கிணங்க, கனிம வளத்துறை அமைச்சர் பிரபு வழிகாட்டுதலின்படி, மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மாபெரும் ரத்ததானம் மற்றும் பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இம்முகாமில் உயிர்காக்கும் ரத்தத்தினை வழங்க தாமாக முன்வந்து ஆர்வமுடன் பங்கேற்ற கழக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள், தன்னாலர்கள் என அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இம்முகாமில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது நல சிறப்பு மருத்துவம்,பெண்கள் நல மருத்துவம்,அறுவை சிகிச்சை ஆலோசனை,எலும்பு மற்றும் மூட்டு வலி ஆலோசனை,கண் பரிசோதனை மற்றும் உடல் முழு பரிசோதனைகள் என பங்கேற்ற பயனாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கான உரிய ஆலோசனைகள் மற்றும் முதல் கட்ட சிகிச்சைகள், மருந்துகள், அரிசிபை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இம்முகாமில் திருப்பத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பயனாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடு மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை, கோச்சடையான் மருத்துவமனை, வாசன் ஐ கேர், ஹாப்டிரன்ட் மீடியாவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தவெக மாவட்ட ஒன்றிய பேரூர் நகர் கழக கிளைக் கழக மகளிர் அணி மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் தொண்டர்கள் ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



0 Comments