பெரியகுளம் அருகே அரசு பள்ளிகளில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு



 தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன். 4) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர் . 



இந்திலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஜத் பீடன் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் கீழ்  உணவினை ஆய்வு செய்தார். 



பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா  நோட்டு புத்தகங்களை வழங்கினார், இந்த நிகழ்வில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் , பள்ளி ஆசிரிய பெருமக்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , வடபுதுப்பட்டி ஊராட்சி செயலர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments