மீமிசலில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்பு



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முகமது ஹாரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், அரிசி, மளிகைப் பொருட்கள், மஞ்சப்பை, மரக்கன்றுகள், சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.









Post a Comment

0 Comments