கவரப்பேட்டை பகுதியில் மின் தேவை பூர்த்தி செய்யும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மரை உதவிகோட்ட பொறியாளர் பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் அருள் நகர், ராஜா தெரு, கவரைப்பேட்டை பஜார், சத்தியவேடு சாலை, வியட்நாம் காலனி, பழவேற்காடு சாலை  ஆகிய பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு அருள்நகர் பகுதியில் அடிக்கடி மின்னழுத்தும் காரணமாக அப்பகுதி மக்கள் இரவு பகல் நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர். 



இது சம்பந்தமாக மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோர் மின்வாரியத்துறை உயர் அதிகாரிகளுக்கு மேற்கண்ட பகுதியில் குடியிருப்புகள் அதிகமானதால் லோ வோல்டேஜ் வருவதை தடுக்கும் வகையில் புதிய டிரான்ஸ்பார்ம் ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 



அந்த கோரிக்கையை ஏற்று 100 கே வி டிரான்ஸ்பார்மரை நேற்று அருள் நகர் பகுதியில் தொடங்கி வைத்தனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் ஏசி, ஃபேன், உள்ளிட்ட பல்வேறு சமையல் உபகரணங்களை தடையின்றி பயன்படுத்தலாம் எனவும் கூறினர் அப்போது பொதுமக்கள்  அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் இந்த சம்பவம் கவரப்பட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. 

Post a Comment

0 Comments