தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக தொண்டர் அணி சார்பில் காரைக்குடியில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகங்கை தேவேந்திர மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிவகங்கை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர் டி.கே. பிரபு தலைமை வகித்தார். அவரது முன்னிலையில் தமிழக வெற்றி கழக தொண்டர் அணி சார்பில் ஏராளமான பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர் அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும், சமூக நலனை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு, பொதுமக்களின் நலனை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிவகங்கை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம். விக்னேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ஒழுங்குமுறையுடனும் சிறப்புடனும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிகழ்வை சிறப்பித்து, வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்தனர்.
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தினரிடையே பெரும் உற்சாகத்தையும், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது.



0 Comments