ஒப்பந்ததாரரிடம் ரூ.1கோடி மாமூல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் உள்ளிட்ட மூன்று பேர் துப்பாக்கி முனையில் கைது



சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன் மீது கொலை, கொள்ளை , ஆள் கடத்தல் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள்  சென்னை எண்ணூர் காட்டூர் மீஞ்சூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் உள்ளன இந்த நிலையில்'  வடசென்னை அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர் ஒருவரை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரவுடி தனசேகரன் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. 

இதுகுறித்து ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார், அந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காட்டூர் காவல் நிலையத்திற்கு அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி எண்ணூர் தனசேகரனை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்  சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து எண்ணூர் தனசேகரன் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர்  உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து கைது துப்பாக்கி,  கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடசென்னை பகுதியைச் சேர்ந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments