சிவகங்கையில் ரூ.15 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பறிமுதல்..... 4 பேர் கைது

 


சிவகங்கை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ₹15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், இளையான்குடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த நால்வர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மலேசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக “குருவிகள்” என்ற பெயரில் செயல்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments