திருவாடானை அருகே ​20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாத சாலை..... மக்கள் கடும் அவதி



ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தில் இருந்து மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையையும், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், அரசூர், பாரூர் கிராமங்கள் வழியாக தார்ச் சாலை ஒன்று செல்கிறது. இச்சாலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இதுவரை எந்தவொரு பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

​இதனால், தார்ச் சாலை முழுவதும் சிதிலமடைந்து, தற்போது வெறும் மண் சாலையாகக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை தினசரி பயணிப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



​சாலை மோசமாக இருப்பதால், பள்ளிப் பேருந்துகளோ அல்லது அவசரத் தேவைகளுக்கான ஆட்டோக்களோ இப்பகுதிக்கு வர மறுக்கின்றன. இதனால் தங்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சாலை குறித்துத் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments