தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவீன் கெளதம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், காவலர்களின் சம்பளம் மற்றும் அலுவலக நிர்வாகப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், நிலுவையில் உள்ள அலுவலக பணிகளை விரைவாக நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : மு.அழகர்.


0 Comments