திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள புகழ்பெற்ற ஜெகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு விழாவு"ஒன்று கூடுவோம்! நினைவுகளைப் பகிர்வோம்!" என்ற உன்னத நோக்கத்துடன் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.இந்தச் சிறப்பு வாய்ந்த விழாவிற்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆவடி காவல்துறை இணை ஆணையர் டாக்டர் ஆர். சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பரிசு சான்றிதழ் வழங்கினார் இதில் பழவேற்காடு ஜெகதாம்பாள் பள்ளித் தலைமை ஆசிரியர் அகத்தியன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் . அஜய் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில், பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டுகளும் விருதுகளும் வழங்கப்பட்டது மேலும், தங்களுக்குக் கல்வி கற்பித்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மூத்த முன்னாள் மாணவர்கள் இந்த மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.
தற்போதைய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான இலவசப் பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சிறப்புக் வகுப்புகளுக்கான ஆதரவு மற்றும் எதிர்காலத்திற்கான தொழில் வழிகாட்டுதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப் பட்டது விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் மதிய உணவும், சிற்றுண்டியும் வழங்கி சிறப்பித்தனர். இதில் முன்னாள் மாணவர் சங்க தலைவர் மனோகரன் பொதுச் செயலாளர் தங்கராஜ் பொருளாளர் எலிசபெத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.



0 Comments