கமுதியில் பட்டா குறைதீர் முகாம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது



இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பட்டா குறைதீர் முகாம் நடைபெற்றது.கமுதியில் வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமையில் பட்டா குறைதீர் முகாம் நேற்று முன்தினம் துவங்கி நேற்று மாலை வரை இரண்டு நாட்கள்  நடைபெற்றது இதில் பட்டா மாறுதல், பட்டா மேல் முறையீடு, கணிணி திருத்தம், உழவர் அட்டை, தொழிலாளர் நல வாரியம் உறுப்பினர் முகாம் போன்றவை சம்பந்தமாக குறைதீர் முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றதுஇம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அவர்களிடம் இருந்து பட்டா மற்றும் இதர மனுக்கள் 555 மற்றும் உழவர் அட்டை சம்பந்தமாக 679 மனுக்கள் என மொத்தம் 1234 மனுக்கள் பெறப்பட்டது இதில் 252 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பட்டா மற்றும் உழவர் அட்டை வழங்கப்பட்டது மேலும் இம்முகாமில் வட்டாட்சியர் அய்யாதுரை, வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேஷ், துணை வட்டாட்சியர்கள் லலிதா,வேலவன், காசிநாதன் சசிகலா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments