தேனி மாவட்டம், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் மீனாட்சி சில்வர் பேலஸ் & மீனாட்சி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ரூபகீதன் ரவிச்சந்திரன், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பாக பெரியகுளம் போக்குவரத்துக் காவல்துறைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 12 பேரி காட்களை வழங்கினார். இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகும்.
இந்த நிகழ்வில், பெரியகுளம் வியாபாரிகள் சங்கத் தலைவர் மணிவண்ணன் ,கௌரவ தலைவர் VG மோகன் , செயலாளர் VTS இராஜவேல், போக்குவரத்து காவல் அதிகாரி சார்பு ஆய்வாளர் செல்வகுமார்,மீனாட்சி ஜுவல்லர்ஸ் சில்வர் பேலஸ் உரிமையாளர் ரூபகீதன் ரவிச்சந்திரன் மற்றும் லக்கி மொபைல் உரிமையாளர் அகமது பவ்ஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


0 Comments