ராமநாதபுரம் மாவட்டம் திருவாளரை பகுதிகளில் வானில் ஒரு அரிய மற்றும் கண்கவர் இயற்கை நிகழ்வு அரங்கேறியுள்ளது. சூரியனைச் சுற்றி ஒரு முழுமையான வட்டவடிவ வானவில் போன்ற ஒளிவட்டம் தோன்றி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அறிவியல் ரீதியாக இது '22 டிகிரி ஹாலோ' என்று அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் மிக உயர்ந்த அடுக்கில் உள்ள சிரஸ் மேகங்களில் இருக்கும் எண்ணற்ற அறுகோண வடிவ பனிக்கட்டிகள் வழியாக சூரிய ஒளி ஊடுருவி, பிரதிபலிப்பதன் காரணமாக இந்த அழகான ஒளிவட்டம் உருவாகிறது.
சூரியனைச் சுற்றி ஒரு மோதிரம் அல்லது வளையம் போலக் காட்சியளிக்கும் இந்த நிகழ்வைக் கண்டு பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த ஒளிவட்டத்தை வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துமாறு அறிவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

0 Comments