கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நந்தவனத்தில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதை தொடர்ந்து சிங்கம்புணரி நான்கு முனை சந்திப்பு சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்" விளம்பர பதாகையில் சினிவாச சேதுபதி எம்எல்ஏ லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தொடர்து தவெக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அதில் கையெழுத்திட்டனர்


0 Comments