திரைப்பட நடிகர் சூர்யாவின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் 8-ஆம் ஆண்டு சிறப்பு ரத்ததான முகாம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரண்ராஜ்,ஒன்றிய அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார்.இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர் நற்பணி நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வமாக பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். பின்னர் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ், மற்றும் ஊட்டச்சத்து அடங்கிய பழவகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தானமாக வழங்கிய ரத்தங்கள் பாதுகாப்பாக சேகரிப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் 20 பேருக்கு புதிய உடைகள் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் துலக்காணம், மாவட்டத் துணைத் தலைவர் செல்வா, மாவட்ட துணைச் செயலாளர் சுதேசின்,கௌரவ தலைவர் கிரி, மாவட்ட நிர்வாகி ராஜேஷ்,ஒன்றிய செயலாளர் ஹரி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா நற்பணி இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



0 Comments